நான் அரசியல் கட்சி தொடங்குகிறேன் - ரஜனி இன்று அறிவிப்பு: எந்திரன் படமும் கேள்விக் குறியில் தான்....

சற்று முன்னரே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில். அரசியலில் ஈடுபட்டால் ரஜனி இனி எவ்வாறு நடிப்பார் ? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது இது தான் முதல் தடவை அல்ல. ஆனால் சொந்த தொகுதியில் போட்டியிட்டு சிவாஜி கனேஷன் டெபாசிட் இழந்தார். பின்னர் விஜயகாந் அரசியலுக்கு வந்து மண் கவ்வினார். அதுபோல ரஜனியின் அரசியல் வாழ்க்கை என்பது, அவர் சேர்த்துவைத்துள்ள சொத்தை அழிக்க வழிகோலுமே தவிர. அவர் அரசியலில் பிரகாசிக்கப் போவது என்பது பெரும் கேள்விக் குறிதான். இது ஒன்றும் சினிமா அல்ல. வீர வசனங்கள் பேச.
இது இவ்வாறு இருக்க, ரஜனியின் எந்திரன் 2.0 படமும், இதனால் தமிழ் நாட்டில் எடுபடாமல் போகலாம் என சங்கர் நினைப்பதாகவும். அப்படம் வெளியான பின்னர் அரசியல் பற்றி அறிவிக்குமாறு ஷங்கர் கெஞ்சியும், ரஜனி காதுகொடுத்து கேட்க்கவில்லை என்றும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. அரசியலில் நுளைந்துள்ள ரஜனியின் எந்திரன்2.00 எவ்வாறு தமிழ் நாட்டில் ஓடப்போகிறது, என்பதும் ஒரு பெரும் கேள்விக் குறியாக உள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்