Header Ads

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, குவிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள்..

கனடாவின் வின்னிபெக் மாகாணத்தில் வசிக்கும் ஈவ் கோர்செனே - கோல் ஸ்டுயர்ட் (Eve Courchene - Cole Steaurt) தம்பதியினரின் 10 வயது மகனான ஷெல்டன் ஸ்டார்ட் (Sheldon Steaurt) நரம்பு மண்டலத்தை கடுமையாக தாக்கக்கூடிய கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்ந நோயை குணப்படுத்துவதற்காக மருந்து தற்போது வரையில் கண்டுபிடிக்கப்படாத காரணத்தினால் சிறுவனின் பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எப்போதும் கலகலப்பாக இருந்துவந்த சிறுவனுக்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தற்போது நடப்பது, சிரிப்பது, பேசுவது போன்ற எளிய செயற்பாடுகளில் கூட சிரமத்தை எதிர்நோக்குகின்றார்.

இந்த விடயம் குறித்து கேள்வியுற்ற தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் இயக்குனரான ஜோடி சார்ன் (Jody Zarn) பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தை தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதோடு அவர்களிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நோக்குடன் சிறுவனுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்புமாறு சமூக வலைத்தளங்களின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வைரலான கோரிக்கையை ஏற்ற பலர் சிறுவனுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து மட்டையயை அனுப்பி வருகின்றனர்.

இது குறித்து சிறுவனின் குடும்பத்தினர் தெரிவிக்கையில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் குவிவதால் ஷெல்டன் (Shelon) மட்டுமல்லாமல் தங்களது கும்பமே மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக  தெரிவித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.