வருந்தும் விராட்டின் ’ஒரு தலைக் காதலி’! : தேற்றும் ரசிகர்கள்..
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் திருமணத்தால் அதிகம் கவலை அடைந்துள்ளவர், இங்கிலாந்தின் கிரிக்கெட் வீராங்கனை டேனியல் வயட்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர ஜோடி விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணம், நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ இத்தாலியில் இனிதே நடைபெற்றது. 29 வயதான விருஷ்கா ஜோடி, இந்து சமயச் சடங்குகளைப் பின்பற்றி திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்துக்கு, இந்தியப் பிரபலங்கள் மட்டுமல்லாது சர்வதேச அளவிலிருந்தும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், இந்தத் திருமணத்தால் மிகுந்த மனவருத்தத்துக்கு ஒருவர் உள்ளாகியுள்ளார். அவர், டேனியல் வயட். இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட்டின் வீராங்கனையான இவர், கடந்த 2014-ம் ஆண்டு “கோலி, என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று ட்விட் மூலம் கோலிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். பின்னர், இங்கிலாந்தில் நடந்த டி-20 கிரிக்கெட் தொடரின்போது டேனியல் வயட்டை நேரில் சந்தித்து அவருக்கு ஒரு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தார் கோலி.
தற்போது விராட்- அனுஷ்கா திருமணத்துக்கு மிகுந்த வருத்தங்களுடன் ‘வாழ்த்துகள்’ தெரிவித்துள்ளார், டேனியல் வயட். இதற்கு பதிலளித்துள்ள விராட், “வாழ்க்கை நகரும்...” எனக் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த மன வேதனையில் இருக்கும் டேனியல் வயட்டுக்கு இந்திய ரசிகர்கள் பலர் இந்தியில் அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியான காதல் தோல்வி பாடல்களை கேட்குமாறும் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்