நிவ்யோர்க் தாக்குதலில் ஐவர் படுகாயம் : சூத்திரதாரி கைது..
அமெரிக்கா - நிவ்யோர்க் நகரின் டைம்ஸ் ஸ்குவேர் வளாகத்தின்
அருகில் தீவிரவாதி சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட, உடலோடு இணைக்கப்பட்ட, நாட்டு
வெடிகுண்டை நேற்று இயக்கி வெடிக்கச் செய்ததில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக
அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிவ்யோர்க் நகரின் மிகவும் நெருக்கடியான மக்கள் நடமாட்டத்தைக் கொண்ட இந்தப் பகுதியில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வெடிப்புச் சம்பவத்தில் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியும் படுகாயமடைந்த நிலையில் அந் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் பங்களாதேஷைச் சேர்ந்த 27 வயதான அகாயட் உல்லா என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.
மேலும் குறித்த தாக்குதல்காரர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறார் என்றும் அண்மையில் காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்