Header Ads

வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு, குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்.. அதிர்ச்சித் தகவல்..

வடகிழக்கு மாநிலமான அசாமில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் திவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்கள் அதிக அளவில் இந்த ஆபரேசன் செய்து கொள்கின்றனர்.

குடும்ப கட்டுப்பாடு ஆபரேசனுக்கு ஆள்பிடிக்க சமூக நல ஆர்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப கட்டுப்பாடு செய்பவர்களுக்கு அரசு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறது. மேலும் ஆள்பிடித்து தருபவர்களுக்கு தலா ரூ.200 வீதம் வழங்கப்படுகிறது.

அசாமில் கிராமப் புறங்களில் வறுமை நிலவுகிறது. எனவே பண ஆசைகாட்டி சமூக நல ஆர்வலர்கள் திருமணமாகாத இளைஞர்களை குடும்ப கட்டுப்பாடு ஆபரேசனுக்கு அழைத்து வருகின்றனர்.

திருமணமாகி ஏற்கனவே குழந்தை பெற்று இருப்பதாக போலி சான்றிதழ் தயாரித்து அதன்மூலம் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்கின்றனர். அவர்களுக்கு போதிய கல்வி அறிவு இல்லாததால் சமூக ஆர்வலர்கள் சொல்வதை கேட்டு இதை செய்கின்றனர்.

இதுபோன்று ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குழந்தை பெற முடியாத நிலையை அறிந்து செய்வதறியாது தவிக்கின்றனர். தங்களுக்கு மீண்டும் மறுசீரமைப்பு ஆபரேசன் செய்து குழந்தை பெற வழிவகை செய்யவேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து அசாம் சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.