பாலியல் பலாத்கார முயற்சியில் தப்பிய பெண் மீது ஆசிட் வீச்சு...
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்திற்குட்பட்ட இங்லாஸ் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணை திலக் சிங் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அந்த பெண் அவரது முயற்சியை தடுத்து நிறுத்தி தன்னை தற்காத்து கொண்டுள்ளார்.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த திலக் சிங் தனது நண்பர்களுடன் மீண்டும் இங்லாசில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென தான் கொண்டுவந்த பாட்டிலை எடுத்து அதிலிருந்த ஆசிட்-ஐ அந்த பெண்ணின் மீது ஊற்றியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அந்த பெண் வலியால் கதறியுள்ளார்.
அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் விரைந்து வந்துள்ளனர். இதையடுத்து திலக் சிங் அவர்களையும் ஆசிட் மூலம் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளான். இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் உடனடியாக அலிகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய திலக் சிங் மற்றும் அவனது நண்பர்களை தேடி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்