ஜெ., சிகிச்சையின்போது அரசு மருத்துவர்களை தடுத்தது யார்? : கூண்டோடு பதிலளித்த மருத்துவர்கள்......
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற
நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை இந்த விசாரணை ஆணையமானது 9 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மேற்பார்வையிட அரசு சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவில் இடம்பெற்ற மருத்துவர்களான பாலாஜி, கலா, முத்துசெல்வன், தர்மராஜன், டிட்டோ ஆகியோரும் இதில் அடங்குவர்.
இதில், மருத்துவர் பாலாஜியை தவிர, தாங்கள் யாரும் ஜெயலலிதாவை அப்பல்லோவில் சந்திக்கவில்லை என்றும், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான பணிகள் எதையும் தாங்கள் செய்யவில்லை என்றும் ஆணையத்தில் மருத்துவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டதும் அந்தக்குழு ஜெயலலிதாவுக்கான சிகிச்சையை தங்களது முழு பொறுப்பில் எடுத்திருக்க வேண்டும் என்றும், ஏன் அதுபோன்று செய்யவில்லை என்றும் அக்குழுவிடம் ஏற்கனவே நடந்த விசாரணையின்போது நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த அவர்கள், தங்களது உயர் அதிகாரிகளின் கட்டளையை ஏற்று தாங்கள் அமைதியாக இருந்ததாக கூறியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவர்கள் குழு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மேற்பார்வையிட அனுமதிக்காமல் தடுத்தது யார்? என்பது குறித்து ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக அரசு மருத்துவர்கள் குழு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்ப ஆணையம் முடிவு செய்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்