இந்த ஆண்டின் டுவிட்டர் டிரென்டில், முதலிடம் பிடித்த ‘ஹேஷ்டாக்’ எது தெரியுமா?
திருக்குறள் போல 140 எழுத்துகளில் டுவிட்டரில் # (ஹேஷ்டாக்) முத்திரையுடன் வெளியிடப்படும் சில பதிவுகள் மிகப்பெரிய தீப்பொறியாக மாறி பல்வேறு தரப்பினரின் கவனத்தை பெரிதாக ஈர்ப்பதுடன் விவாதப் பொருளாகவும் அமைந்து விடுகிறது. அதிகமாக பகிர்தல் முந்தைய பதிவுக்கு பதில் அளித்தல் என அந்த கருத்தை சுற்றி காரசாரமான விவாதங்களும் இதே 140 எழுத்துகளில் அமைகிறது.
சமீபத்தில் இந்த 140 எழுத்துகள் என்ற உச்சகட்ட வரம்பை தளர்த்தியுள்ள டுவிட்டர், முந்தைய பதிவின் தொடர்ச்சியாக அதே பதிவில் மேலும் ஒரு 140 எழுத்துகள் கொண்ட பதிவை வெளியிடும் வசதியை பயனாளர்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. தற்போது நமது கருத்துகளை இரு டுவீட்களாக 280 எழுத்துகளுக்குள் பதிவு செய்யலாம்.
இந்நிலையில், கடந்த ஆண்டில் இந்திய அளவில் பரபரப்பான விவாதப்பொருளாக மாறி இந்த ஆண்டில் நமது நாட்டில் முதல் மூன்று இடங்களை பிடித்த ‘ஹேஷ்டாக்’ பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் செய்தி மற்றும் ஆட்சித்துறை சார்ந்த பிரிவில் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் வானொலி மூலம் உரையாற்றும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி முதலிடம் பிடித்துள்ளது. அவரது உரை தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் செய்த ஒரு டூவீட்டும் வைரலாக பரவியது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு, ஜி.எஸ்.டி. போன்றவை டிரென்டிங்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்திருந்தன. பின்னர், பண மதிப்பிழப்பு, தூய்மை இந்தியா திட்டம், மும்பை மழை, உத்தரப்பிரதேசம் தேர்தல், குஜராத் தேர்தல், ஆதார் தொடர்பான ஹேஷ்டாக்கள் வேகமாக பரவின.
மேலும், சினிமாத்துறையை பொருத்தமட்டில் பாகுபலி 2, மெர்சல் ஆகிய ஹேஷ்டாக் மிக அதிகமாக பகிரப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல்களை இந்தியாவுக்கான டுவிட்டர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டுவிட்டரில் அதிகமான அபிமானிகளை பெற்ற பிரபலங்களில் (சினிமா மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்களை பின்னுக்குத்தள்ளி) 3.75 கோடி பேர் பின்தொடரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்