Header Ads

காட்டுப்பன்றியை உண்டவர்கள் கோமா நிலையில்.. அதிர்ச்சியில் வைத்தியர்கள்..



காட்டுப்பன்றி ஒன்றினை வேட்டையாடி அதனை பதப்படுத்தி உண்ட, சிலர் கோமா நிலையை அடைந்த சம்பவத்தினால், நியூசிலாந்தின் வைத்தியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில் வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த ஓர் குடும்பத்தினர், சமீபத்தில் காட்டுப்பன்றி ஒன்றினை வேட்டையாடி அதனை பதப்படுத்தி உண்டுள்ளனர். சாப்பிட்டு முடித்து சற்று நேரத்தின் பின் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக மயங்கியுள்ளனர்.அதில் ஒருவர் மயங்கிய நிலையிலேயே வைத்தியசாலைக்கு தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி அம்புலன்ஸ்(Ambulance) சேவையை அழைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர்கள் கோமா நிலையை அடைந்துள்ளதாக வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டது. கோமா நிலைமைக்கு என்ன காரணம் என சோதித்த வைத்தியர்கள், குடும்பத்தினர் அனைவரும் காட்டுப்பன்றி இறைச்சியை சாப்பிட்டிருப்பதாக கண்டறிந்தமையைத் தொடர்ந்து,அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
அவர்கள் உண்ட காட்டுப்பன்றி இறைச்சியினால் அவர்கள் பாட்டுலிசம்(Pattulicam) எனும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, வைத்தியர்கள் சந்தேகித்து, குறித்த நோய்க்கான விஷ முறிவு மருந்துகளை அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களில் இருவருக்கு நல்ல முன்னேற்றம் தெரிந்துள்ளதாகவும், தற்போது அவர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.