தனக்குத்தானே பிரசவம் பார்த்து, அதனை முகநூலில் பதிவேற்றம் செய்த பெண்..!

தாய்வான் நாட்டைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர், தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை வெளியே எடுக்கும் புகைப்படம் ஒன்றினை அண்மையில் முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவமானது,பலரையும் அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது.
குறித்த புகைப்படத்தை மருத்துவர் ஒருவரே தனது முகநூலில் பதிவு செய்திருந்த நிலையில் முகநூல் நிர்வாகமானது, குறித்த புகைப்படமானது ஆபாசம் என தெரிவித்து அதனை நீக்கியுள்ளது.
இதுகுறித்து குறித்த மருத்துவர் கூறியதாவது,
தனக்குத்தானே பிரசவம் பார்த்த அந்த பெண்ணின் மன தைரியத்தை பாராட்டுவதற்காகவும், மற்ற கர்ப்பிணி பெண்களுக்கு இதுவொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கருதியும்தான், முகநூலில் பதிவேற்றியதாக தெரிவித்தார். ஆனால் இந்த புகைப்படத்தை ஆபாசம் என்று கூறி முகநூல் நிர்வாகம் நீக்கியது, துரதிஷ்டவசமானது என்றும் இந்த மருத்துவர் கூறியுள்ளார். இருப்பினும் இந்த புகைப்படம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

குறித்த புகைப்படமானது, முகநூலிலிருந்து நீக்குவதற்கு முன்னரே, ஒரே ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் லைக்குகளை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்