இலங்கை, பாடசாலையில் வைத்து, ஆபாசப்படம் பார்த்த மாணவிகளால் பரபரப்பு..
கலவன் பாடசாலையொன்றின் மாணவிகள் பலரின் மொபைல் போன்களில் ஆபாச காட்சிகள் சேமிக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள பிரபல கலவன் பாடசாலையொன்றில் மாணவிகள் ஒரு கும்பலாக ஔிந்து நின்று கொண்டு எதையோ பார்த்துக் கொண்டிருப்பதைக் ஆசிரியர் ஒருவர் கண்ணுற்றுள்ளார்.
குறித்த மாணவிகள் நின்றிருந்த இடத்தை அவர் அடைந்தபோது அம்மாணவிகள் தங்கள் கையில் இருந்து மொபைல் போன் ஒன்றை அவசரமாக மறைக்க முற்பட்டுள்ளனர்.எனினும், குறித்த மொபைல் போனை பாடசாலை அதிபர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் கைப்பற்றி சோதனை மேற்கொண்ட போது அதில் ஏராளமான ஆபாச காட்சிகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், மேலும் பல மாணவிகளின் கைகளிலும் அவ்வாறான காட்சிகள் அடங்கிய மொபைல் போன்கள் காணப்பட்டுள்ளது.இது குறித்த விசாரணைகளின் போது தமது காதலர்கள் மூலமாக குறித்த மொபைல் போன்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறான ஆபாச காட்சிகள் அடங்கிய மொபைல் போன்கள் வழியாக மாணவிகளை தவறான வழிக்கு கொணடு துஷ்பிரயோகம் செய்யும் கும்பல் ஒன்று குறித்தும் இதன் போது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாணவிகளின் பெற்றோருக்கு சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், மாணவிகளை வழிகெடுக்க முற்படும் குழுவினர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்