மாவீரர் துயிலும் இல்லத்தைப் பார்வையிட்டுச் செல்லும், சிங்கள மக்கள்..
மடு தேவாலயத்திற்கு இன்று வருகைத் தந்திருந்த குடும்பத்தார் அயல் கிராமமாகிய பெரிய பண்டி விரிச்சானுக்கு சென்று மாவீரர் துயிலும் இல்லம் இருந்த பகுதியை பார்வையிட்டுள்ளனர்..
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் மடு ஆலயத்திற்கு வரும் சிங்கள மக்கள் பெரும்பாலானவர்கள் ஆலயத்தில் இருந்து ஒன்றரை கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்திருந்த பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தை பார்வையிட்டு செல்வது வழக்கம்.
யுத்தத்தின் பின்னர் அந்த மாவீரர் துயிலும் இல்லம் இலங்கை இராணுவத்தால் முற்றாக அளிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆலயத்திற்கு வந்த சிங்கள மக்கள் மாவீரர் துயிலும் இல்லத்தை தேடிவந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
தற்போது மேற்படி துயிலுமில்லம் துப்பரவு செய்யப்பட்டு இருப்பதால் சிங்கள மக்கள் மாவீரர் துயிலுமில்லத்தை பார்வையிட்டுச் செல்கின்றனர்.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்