Header Ads

பாவம் என் புருஷன், பச்சப் புள்ள.. முத்தக்காட்சி குறித்து பதிலளித்த அஞ்சனா..

தற்போது வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி என்ற படத்தில் நிவேதா பெத்துராஜும், கயல் சந்திரனும் ஒரு காட்சியில் மிக அருகில் இருப்பது போல் டீஸரில் வெளியானது. இது தான் நிவேதா பெத்துராஜிற்கு முதல் கவர்ச்சி படம்.

இதை பார்த்த நிவேதா ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆந்துள்ளார்கள். மேலும், சந்திரன் முத்தம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பலர் பேச அவரின் மனைவி அஞ்சனாவிடம் "பார்ட்டி டீஸரை பார்த்த பிறகு அஞ்சனா நிவேதாவை பார்த்து, வாடி என் சக்களத்தி என்பார்" என்று ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட "அவ்ளோ எல்லாம் வொர்த் இல்ல!! பாவம் என் புருஷன் பச்சப் புள்ள. நடிக்க மட்டுமே தெரியும்" என்று அவருக்கு ட்வீட் மூலம் பதில் அளித்தார் அஞ்சனா.

சந்திரன், நிவேதா பெத்துராஜ் முத்த காட்சி பற்றி அஞ்சனாவின் கருத்து..!

அஞ்சனா மற்றும் கயல் சந்திரன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்கள் இருவரும் நன்கு புரிந்துகொண்ட கணவன் மனைவி என்பதால் இவர்களுக்கு இடையே இந்த மாதிரியான எந்த சண்டையும் வாராது என்று ஒருவர் மற்ற ட்வீட் மூலம் தெரிவித்தார். எப்படியோ நல்லா இருந்தா சரி.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.