விரைவான, நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும் துணை ரோபோட் தயார்..
மனிதர்களுக்கு இரவு தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாததாகும். நம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்திற்காக செலவழிக்கிறோம். உலகில் பலர் இரவில் சரியான உறக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். 5 பேரில் ஒருவர் இரவு தூக்கம் இல்லாமல் உள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ரோபோட் பொறியியல் மாணவர்கள் ரோபோட் ஒன்றை வடிவமைத்துள்ளனர். தலையணை போன்று இருக்கும் இந்த ரோபோட் தூக்கம் வராதவர்களுக்கு விரைவான, நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரோபோவை அருகில் வைத்து படுக்கும் போது அதில் இருந்து வரும் சத்தம் தூக்கத்தை வர வைக்கும். அதில் உள்ள ஒலிப்பெருக்கி வழியாக இதயத்துடிப்பு, மனதிற்கு அமைதி தரும் இசை, மெல்லிசை மற்றும் அதில் நமக்கு பிடித்தவர்களின் குரலை பதிவேற்றம் செய்து வைக்கலாம். பின்னர் நாம் உறங்கும் போது கேட்கலாம். இதன் மூலம் நம் மனதை அமைதியாக்கி தூக்கத்தை வரவழைக்கும். தூங்கிய பிறகு அந்த இசை தானாக நின்று விடும்.
இந்த ரோபோட்டின் முக்கிய நோக்கம் 2025-ம் ஆண்டிற்குள் 1 லட்சம் மக்கள் நிம்மதியான தூக்கம் பெறுவதற்கு உதவ வேண்டும் என்பதாகும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்