”அவர் காதல் புரொபோஸ் செய்த அழகுக்கே காதலிக்கத் தோணுச்சு!”, ரோஹித் ஷர்மா- ரித்திகாவின் காதல் கதை..
இந்திய கிரிக்கெட் அணிக்கு நேற்று முன்தினம் ரோஹித் ஷர்மா அடித்த இரட்டை சதம் சாதனை ஆனதைவிடவும், அவர் தன் திருமண நாளன்று, மனைவி ரித்திகா சஜ்தேக்கு தன் சாதனையை டெடிகேட் செய்ததுதான் செம்ம வைரலானது. அந்த அழகான தருணத்தை சமூகவலைதளங்களில் பலரும் கண்டு ரசித்தனர்.
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், ரோஹித் ஷர்மா 191 ரன்கள் எடுத்த நிலையில், அந்த இன்னிங்ஸ் முடிய ஒரே ஒரு ஒவர் மட்டுமே இருந்தது. இந்த பரபரப்பான சூழலை புரிந்துகொண்ட ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே (Ritika Sajdeh) கண்கலங்கி நிற்க, செம்மையாக ஆடி 17 ரன்கள் எடுத்து, மொத்தம் 208 ரன்கள் எடுத்தார் ரோஹித். தன் வெற்றியை நிச்சயதார்த்த மோதிரத்தை முத்தமிட்டு அதை அப்படியே காற்றில் பறக்கவிட்டு மனைவிக்குத் தன் வெற்றியை டெடிகேட் செய்தார் ரோஹித். மைதானத்திலிருந்த அனைவரும் நெகிழ, கண்கலங்கி மகிழ்ந்தார் ரித்திகா சஜ்தே! அவர்களுடைய மகிழ்வுக்குப் பின்னிருக்கும் ஸ்வீட் விஷயங்கள் இதோ...
*ரித்திகா சஜ்தே 2008ம் ஆண்டு, கார்னர்ஸ்டோண்ட் (Cornerstone) என்ற ஒரு ஸ்போர்ட்ஸ் கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அந்த ஆண்டுதான், ஒரு ரீபக் விளம்பர ஷூட்டிங்கில், ரோஹித்தை முதன்முறையாகச் சந்தித்தார் ரித்திகா. ரோஹித்தை ரித்திகாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்!
*ரோஹித் ஷர்மாவும் ரித்திகா சஜ்தேவும் நண்பர்களானார்கள். பிறகு காதலில் விழுந்து ஆறு வருடங்கள் காதல் காலத்தைக் கடந்து 2015ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி, திருமணம் செய்துகொண்டனர்.
*ரித்திகா சஜ்தே ஸ்போர்ட்ஸ் மேனேஜராக இருந்தவர். ரோஹித் ஷர்மா கிரிக்கெட்டில் கால் பதித்த நாளிலிருந்து, அவர் ஆடும் ஒவ்வொரு மேட்சிலும் ரித்திகா சஜ்தேவை கேலரியில் பார்க்கலாம். அது உள்ளூர் போட்டியாக இருந்தாலும் சரி..வெளிநாட்டு போட்டியாக இருந்தாலும் சரி!
ரோஹித்*ரோஹித் ஷர்மா ரித்திகா சஜ்தேவை புரொபோஸ் செய்த இடம், மும்பையிலுள்ள கிரிக்கெட் கிளப். இது ரோஹித் முதன்முதலாக கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்ட இடம். ரோஹித் புரொபோஸ் செய்தது பற்றி ரித்திகா ஒரு முறை பேசுகையில், “அன்று மும்பை இண்டியன்ஸ் அணிக்காக ஒரு நிகழ்ச்சி நடந்துமுடிந்திருந்தது. அப்போ ரோஹித் என்னிடம், 'நாம ஒரு டிரைவ் போகலாம்'னு சொன்னார். நாங்க நிறைய தடவை அப்படி டிரைவ் போயிருக்கோம். அதனால, அன்னைக்கு ரோஹித் கேட்டது எனக்குப் புதுசா தெரியலை. அவர் என்னை எங்க கூட்டிட்டு போறாருனு நானும் கேக்கலை. அவர் என்னைக் கூட்டிட்டுப் போனது. போரிவிலி ஸ்போர்ட்ஸ் கிளப் (Borivili Sports Club). அங்கே வெச்சு, "என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?'னு கேட்டார். அவர் அப்படி புரொபோஸ் பண்ணதுக்கே அவரை காதலிக்கலாம்னு தோணுச்சு. என் வாழ்க்கையில் நடந்த மிகவும் அழகான தருணம் அது” என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.
*ரித்திகாவுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிரியம். அவ்வப்போது தன் ட்விட்டர் பக்கத்தில் நாய்களுடன் அவர் கொஞ்சி விளையாடும் வீடியோக்களைப் பார்க்கலாம்.
*ரோஹித் ஷர்மாவை ரித்திகா செல்லமாக அழைப்பது “ரோ”! ரோஹித் ஷர்மா தன் ட்விட்டர் பக்கத்தை “IamRo45" என்று பெயரில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்!
*இரட்டை சதம் அடித்து பிறகு, ரோஹித் பேசுகையில், “இந்த ஸ்பெஷல் நாளில், என் மனைவி என்னுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இரட்டை சதம்தான், எங்கள் திருமண நாளுக்கு, நான் அவளுக்கு அளிக்கும் பரிசு. எப்போதும், எனக்கு பலம் சேர்ப்பவள் அவள். இந்த விளையாட்டில், நிறைய மன அழுத்தங்கள் இருக்கும். என் மனைவி என்னுடன் இருப்பதால்தான் அவற்றை எல்லாம் கடந்துவருகிறேன்”, என்று நெகிழ்ந்து கூறினார் ரோஹித் ஷர்மா!

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்