Header Ads

விபச்சார வழக்கில் கைதான நடிகை வினிதாவிற்கு, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும். அவரின் தற்போதைய நிலையும்..

தமிழ் சினிமாவில் அறிமுகமான காலத்திலேயே கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் நடிகை வினிதா.  நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் வெளியான சின்ன ஜமீன் திரைபடத்தில் அறிமுகமான இவருக்கு அந்த படம் நல்ல தொடக்கமாக அமைந்தது.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார் நடிகை வினிதா. ஆனால், குணசித்திர வேடங்களை விட கவர்ச்சி வேடங்களே இவருக்கு அதிகம் கிடைத்தன. 39 வயதாகும் இவர் இது வரை சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், கடந்த 2002-ம் ஆண்டு விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறி தனது குடும்பத்தாருடன் கைது செய்யப்பட்டார் வினிதா. வழக்கை விசாரித்த நீதிபதி 70  படங்களை நடித்திருக்கும் ஒரு நடிகை விபாசரத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும், வினிதா விபசாரத்தில் ஈடுபட்டார் என்பதற்கு சரியாக எந்த ஆதாரமும் இல்லை. வினிதா தவறு எதுவும் செய்யவில்லை எனக்கூறி கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கினார்.

ஆனால், இந்த விவகாரத்தால் வினிதா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அலைச்சல் மற்றும் மன உழைச்சல் ஆகியவை தண்டைனையாக கிடைத்துள்ளது என வினிதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பிறகு, 2009-ம் ஆண்டு வெளியான “நேற்று போல் இன்று இல்லை” என்ற படத்தில் இறுதியாக நடித்தார். அதன் பிறகு, படவாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் வினிதா தகுந்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் நடிக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.