Header Ads

இளவரசி டயானாவுக்கு மிகவும் பிடித்த, வைர நகையை அணிந்த கேட் மிடில்டன்..



பிரித்தானிய மகாராணி எலிசபெத் தலைமையில் நடந்த குளிர்கால விருந்து நிகழ்ச்சியில் மறைந்த டயானா பயன்படுத்திய வைர தலையணியை கேட் மிடில்டன் அணிந்திருந்தது பலரையும் கவர்ந்துள்ளது.
லண்டனில் உள்ள பங்கிங்காம் அரண்மனையில் விருந்து நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டனுடன் வந்தார்.
தனது மாமியாரான மறைந்த இளவரசி டயனாவுக்கு மிகவும் பிடித்த நகைகளில் ஒன்றான வைர தலையணியை கேட் தலையில் அணிந்திருந்தார்.
குறித்த வைர அணிகலனை டயனாவுக்கு கடந்த 1981-ல் அவரின் திருமணத்தின் போது எலிசபெத் மகாராணி பரிசாக அளித்தார். 
வைர தலையணியில் மொத்தம் 19 வைர வளைவுகள் பதிக்கப்பட்டுள்ளன.
பரம்பரை பரம்பரையாக அந்த தலையணி பிரித்தானிய ராஜ குடும்பத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
எலிசபெத் மகாராணிக்கு முன்னர் வைர தலையணியை மகாராணி மேரி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.