Header Ads

கல்லூரி மாணவியை உல்லாசத்துக்கு அழைத்த, போலீஸ்காரருக்கு நேர்ந்த கெதி ..

காரைக்கால்: காரைக்கால் கோட்டுச்சேரி ஜீவாநகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(27). இவர் காரைக்கால் நிரவி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். கடந்த 27ம் தேதி இவர் காரைக்கால் கடற்கரை பகுதியில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடற்கரை சாலையில் ஒரு காரில் ஒரு கல்லூரி மாணவி தனது காதலனுடன்  உட்கார்ந்திருந்தார். இதைக்கவனித்த போலீஸ்காரர் ராஜ்குமார் அந்த காதல்ஜோடியிடம் சென்று அவர்கள் வைத்திருந்த செல்போன்களை பறித்துக்கொண்டார். பின்னர் இருவரை பற்றியும் விசாரித்து முகவரியை கேட்டார். போன் நம்பரையும் தெரிந்து கொண்டார். உங்கள் மீது விபசார வழக்கு போட்டு விடுவேன் என மிரட்டி அவர்களை அனுப்பி விட்டார்.

28ம் தேதி  அந்த கல்லூரி மாணவிக்கு  போலீஸ்காரர் ராஜ்குமார் போன் செய்து காதல் வசனம் பேசி ஜொள்ளு விட்டார். இதற்கு மாணவி கோபமாக பேசி உள்ளார். ஆனாலும் போலீஸ்காரர்  மறுநாளும் மாணவிக்கு போன் செய்து நீயும், காதலனும் காரில் எப்படி இருந்தீர்கள் என்பதை படம் பிடித்து வைத்து உள்ளேன். உங்கள் போனில் இருந்தும் பல படங்களை எடுத்து வைத்திருக்கிறேன். உன் பெற்றோருக்கு அனுப்பி வைக்கிறேன். நான் சொல்லும் இடத்துக்கு வந்து என்னுடன் ஒரு நாள் தங்கியிரு.  இல்லாவிட்டால்போட்டோக்களை பெற்றோருக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன மாணவி, தனது காதலனிடம் கூறி உள்ளார்.

காதலன் நிரவி போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டர் பாலிடம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் போலீஸ்காரர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கல்லூரி மாணவியை பிளாக் மெயில் செய்து உல்லாசம் அனுபவிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபோல அவர் வேறு பெண்களிடம் வம்பு செய்து உள்ளாரா என்றும் போலீசார் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.