Header Ads

மணிமேகலை, ஹுசைன் காதல் கதையில், லாரன்ஸ் மாஸ்டருக்கு என்ன சம்பந்தம்.?

பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை பிடித்திருப்பவர் மணிமேகலை. இவர் சமீபத்தில் ஹுசைன் என்பவரை பதிவு திருமணம் செய்துகொண்டார். இவர் சமீபத்தில் அவரது காதல் கதையை கூறியுள்ளார்.

மொட்ட சிவா கேட்ட சிவா படத்தில் லாரன்ஸ் மாஸ்டர் அருகில் நடனம் ஆடிய ஹுசைனை பாராட்ட எண்ணி அவரது தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டுள்ளார் மணிமேகலை. இவர் தொகுப்பாளினி என்பதால் அவரை பாராட்டினால் சிறிது நேரம் பேசுவார் என்று பேசியுள்ளார் மணிமேகலை. ஆனால் ஹுசைன் நன்றி என்று கூறி உடனே காலை கட் செய்துள்ளார்.

மணிமேகலை, ஹுசைன் காதல் கதையில் லாரன்ஸ் மாஸ்டருக்கு என்ன சம்பந்தம்.?

அவரின் அந்த குணம் பிடிக்க அடிக்கடி அவரிடம் போன் பேச தொடங்கிய மணிமேகலை ஒருமுறை அவரை ஹைதராபாத்துக்கு காரில் தனியாக போய் சந்தித்து காதலை கூறியுள்ளார். பிறகு ஹுசைன் காதலை ஒப்புக்கொண்டதால். மணிமேகலை தந்தையிடம் விஷயத்தை கூற அவர் மதம் வேற என்பதால் மணிமேகலைக்கு வேறு மாப்பிளை பார்க்க தொடங்கியுள்ளார். அதனால் தான் அவசர திருமணம் செய்துகொண்டதாக மணிமேகலை கூறுகிறார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.