திருமணமான பெண்ணுடன் பாலியல் உறவு: ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்குவதா? இது என்ன நியாயம்..?
கேரளாவை சேர்ந்தவர் ஜோசப் ஷைன் (வயது 40). வியாபாரியான இவர் இப்போது இத்தாலி நாட்டில் வசித்து வருகிறார். அவரது சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
திருமணம் ஆன பெண்ணுடன் அவரது கணவரின் சம்மதம் இன்றி வேறு ஒரு திருமணமான ஆண் பாலியல் ரீதியான தொடர்பு வைத்திருந்தால் விபசார சட்டத்தில் ஆண் மட்டுமே தண்டனைக்குரியவன். அந்த பெண்ணுக்கு தண்டனை கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
அநீதியானது
இந்திய தண்டனை சட்டம் 497 மற்றும் தொடர்புடைய குற்ற சட்டப்பிரிவு 198 (2) ஆகியவை இதனை வலியுறுத்துகிறது. ஒரு குற்றத்தில் தொடர்புடைய ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்குவது அரசியல்சாசனத்துக்கு விரோதமானது, அநீதியானது, சட்டவிரோதமானது, ஒருதலைப்பட்சமானது, அடிப்படை உரிமைகளை மீறுவது, பாலின சமநிலைக்கு மாறானது. எனவே இந்த சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய அரசு 4 வாரங்களுக்குள் இதற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
பெண்ணுக்கும் சம பொறுப்பு
அதில், திருமணமான பெண்ணுக்கு அவரது கணவர் அனுமதி இல்லாமலோ, அனுமதியுடனோ வேறு ஒரு திருமணமான ஆணுடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு ஆகாது. ஆனால் விபசாரம் தொடர்பான சட்டத்தில் அந்த ஆணுக்கு 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விபசார குற்றத்தில் அந்த பெண்ணுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. அப்படியிருக்க அந்த ஆணுடன் சேர்த்து அந்த பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்படாதது ஏன்? என்பதற்கு விளக்கம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்