பத்து மாத குழந்தையை, கிணற்றில் வீசி கொன்ற தந்தை..
சிவகாசி அருகே உள்ள சிங்கம்பட்டி இந்திரா குடியிருப்பைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது26). இவர் சிவகாசியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார்.
அதே சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்த முத்து லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முனீஸ்வரன் என்ற 10 மாத குழந்தை இருந்தது.
இந்த நிலையில் முத்துலட்சுமி தனது கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்பட்ட சிவக்குமார் அதே பகுதியில் உள்ள முத்துலட்சுமியின் தாயார் மாரியம்மாளிடம் கொடுத்து விட்டார்.
சில நாட்களுக்கு முன்பு மாரியம்மாள் வீட்டுக்கு சென்ற சிவக்குமார், முனீஸ்வரனை நான் வளர்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். அதனை நம்பிய மாரியம்மாள் குழந்தையை கொடுத்து விட்டார்.
10 மாத குழந்தை என்பதால் சிவக்குமாரால் குழந்தையை பராமரிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் முனீஸ்வரனை மாரனேரி பகுதியில் உள்ள கிணற்றில் வீசி விட்டுச்சென்று விட்டார்.
இந்த நிலையில் கிணற்றில் குழந்தையின் பிணம் மிதப்பதைப் பார்த்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டனர்.
விசாரணையில் அந்த குழந்தை சிவக்குமாரின் மகன் முனீஸ்வரன் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
புதுவையில் தலைமறைவாக இருநத அவரை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். விசாரணையில் குழந்தையை வளர்க்க சிரமப்பட்டதால் கிணற்றில் வீசி கொன்றதாக கூறி உள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்