Header Ads

ஏமன்: சவுதி அரேபியா கூட்டுப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில், 51 கிளர்ச்சியாளர்கள் பலி..

ஏமன் நாட்டில் சவுதி அரேபியா கூட்டுப் படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 51 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

ஏமன்: சவுதி அரேபியா கூட்டுப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 51 கிளர்ச்சியாளர்கள் பலி
ஏடன்:

ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேசமயம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏமன் நாட்டு மேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிறைந்துள்ள பகுதியின் மீது சவுதி அரேபிய கூட்டுப்படையினர் நேற்று  முன்தினம் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 51க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

கடந்த இரண்டு தினங்களாக கூட்டு படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து 5-க்கு மேற்பட்ட கிராமங்கள் மீட்கப்பட்டுள்ளது எனவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.