Header Ads

சிலி நாட்டில் நிலநடுக்கம் - ரிக்டரில் 5.0 புள்ளிகளாக பதிவு..

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கலாமா நகரின் தென்மேற்கே பூமியின் அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று முன்தினம்  மாலை சுமார் 6:58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்துக்கு பயந்து மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பதற்றத்துடன் வீதியில் கூடினர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.