4 சகவீரர்களை சுட்டுக் கொன்ற, மத்திய துணை ராணுவப் படை வீரர்..
சத்தீஸ்கர் உள்ள பாசகூடா பகுதியில் நக்சலைட்களை வேட்டையாடிவரும் மத்திய துணை ராணுவப் படையினருக்கான முகாம் ஒன்றுள்ளது.
நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இங்கு பணியாற்றும் சனத் குமார் என்ற வீரர் தன்னிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாகியால் திடீரென சக வீரர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டு ஆவேச தாக்குதலில் ஈடுபட்டார்.
எதிர்பாராத இந்த தாக்குதலில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் கஜானந்த் என்பவர் உயிரிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்தியவரை அங்கிருந்த மற்ற வீரர்கள் மடக்கிப் பிடித்து மேலும் பல உயிர்கள் பலியாகாமல் தடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சக வீரர்களை திடீரென துப்பாக்கியால் சுட்டது பாதுகாப்பு படை வீரர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்