Header Ads

'ஜங்கிள் புக்' படத்தில் வருவது போல், குரங்குகளுடன் விளையாடும் 2 வயது சிறுவன்..

கர்நாடகா மாநிலம் ஆலப்பூர் கிராமத்தில் வசிக்கும் சமார்த்த் என்ற 2 வயது சிறுவனின் கதை அனைவரையும் வியக்க வைக்கிறது. இச்சிறுவன் கிராமத்தினுள் சுற்றித்திரியும் குரங்கு கூட்டத்தினுடன் எவ்வித பயமும் இன்றி மகிழ்ச்சியாக விளையாடுகிறான். மேலும் தனது உணவை அதனோடு பகிர்ந்து உண்பான். 



ஒருநாள் அதனோடு விளையாடியதிலிருந்து குரங்குகள் தினமும் சமார்த்தை தேடி வர ஆரம்பித்தன. அவன் தூங்கிக்கொண்டிருந்தாலும் எழுப்பி ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நேரம் விளையாடி விட்டு செல்கின்றன.

கிராமத்தில் உள்ள மற்றவர்களை பயமுறுத்தும் இந்த குரங்குகள் இச்சிறுவனிடம் மட்டும் அன்போடு பழகுகின்றன. தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக வந்து விடுகின்றன. இதுவரை ஒரு நாள் கூட தவறியதில்லை. குரங்கிற்கும் இந்த சிறுவனுக்கும் இடையே சிறந்த உறவு இருப்பதாக கிராமத்தினர் கூறுகின்றனர். 



ஜங்கிள் புக் படத்தில் வரும் சிறுவன் காட்டில் உள்ள மிருகங்களிடையே வளர்வான். அது போல் சமார்த் குரங்குகளுடன் விளையாடுவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.