2022 காமன்வெல்த் போட்டி, இங்கிலாந்து பர்மிங்காம் நகரில்..
பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளுக்கு இடையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டுத் தொடர் காமன்வெல்த். கடந்த காமன்வெல்த் போட்டி 2014-ல் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் நடைபெற்றது. 2018-ம் ஆண்டிற்கான போட்டி ஆஸ்திரேியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடக்கிறது.
2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி பிரச்சினையால் மிகப்பெரிய இந்த தொடரை எங்களால் நடத்த இயலாது என தென்ஆப்பிரிக்கா கூறிவிட்டது. இதனால் புதிதாக விண்ணப்பம் கோரப்பட்டது.
செப்டம்பர் மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இங்கிலாந்தின் பர்மிங்காம் மற்றும் லிவர்பூல் நகரம் விருப்பம் தெரிவித்திருந்தது. இரு நகரமும் ஒரே நாட்டைச் சார்ந்ததால் பர்மிங்காம் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் பர்மிங்காம் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்தது. மேற்கொண்டு எந்த நகரமும் விருப்பம் தெரிவிக்காததால் பர்மிங்காம் வெற்றி உறுதியானது. இருந்தாலும் செப்டம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
அதன்பின், விண்ணப்பங்களில் சில குறைபாடு இருந்ததால் நவம்பர் மாதம் இறுதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. நவம்பர் மாதம் முடிந்தவுடன் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், இங்கிலாந்து அரசு மற்றும் பர்மிங்காம் நகரம் உறுதியளிக்காததால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தாமதமானது.
இந்நிலையில், தற்போது காமன்வெல்த் கேம்ஸ் பெடரேசன் தலைவர் லூயிஸ் மார்ட்டின், பர்மிங்காமில் 2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 காமன்வெல்த் போட்டிற்கு 750 மில்லியன் பவுண்டு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்