Header Ads

லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: 1 செக்கனில் உங்கள் கார் திருட்டு போகலாம்- பொலிஸ் வீடியோ..



லண்டனில் தற்போது நூதனமான முறையில் கார் திருட்டு நடந்து வருகிறது. வீட்டுக்கு உள்ளே இருக்கும் உங்கள் கார் திறப்பை அப்படியே காப்பி அடித்து. அதில் இருந்து வெளியாகும் சிக்னலை பிடித்து. வெளியே உள்ள உங்கள் காரை ஸ்டாட் செய்து திருடர்கள் ஓட்டிச் செல்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைக்க கூடும். ஆம் ஆனால் சாத்தியம் தான். மிகவும் விலை உயர்ந்த கார்களுக்கு தற்போது சாவி வருவது இல்லை. மாறாக பிளாஸ்டிக்கினால் ஆன, திறப்பு வருகிறது. அதில் ஒரு சிக்னல்(அலைவரிசை இருக்கும்) . அதனை பாவித்து நீங்கள் கார் கதவை திறக்க முடியும். மூட முடியும். மேலும் ஸ்டாட் செய்யவும் முடியும்.



இத் திருடர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், 2 சாதனங்களோடு வருகிறார்கள். ஒன்றை உங்கள் வீட்டுக் கதவின் அருகே பிடிக்கிறார்கள். அது வீட்டுக்கு உள்ளே இருக்கும் உங்கள் கார் சாவியில் இருந்து வெளியாகும் அலை வரிசையைக் கண்டு பிடித்து. மற்றைய கருவிக்கு சொல்ல. அந்த 2வது கருவி ஊடாக காரின் கதவை திறப்பதோடு மட்டுமல்லாது. அச்சாதனத்தை பயன்படுத்தி காரை இலகுவாக ஸ்டாட் செய்து, ஓட்டிச் செல்லவும் முடியும்.பொலிசார் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். நீண்ட காலமாக நூதனமான முறையில் கார் திருட்டு நடப்பதை பொலிசார் ஆராய்ந்து வந்தார்கள். ஆனால் தற்போது ஒரு வீட்டின் CCTV கமராவில் பதிவான இந்த , வீடியோவை வைத்தே பொலிசாருக்கு என்ன நடந்திருக்கிறது என்று புரிந்துள்ளதாம்.

இது போன்ற கருவிகளை சினிமா படங்களில் தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் லண்டனில் உலவும் ஒரு கோஷ்டியிடம் இந்த கருவிகள் உள்ளது. அப்படி என்றால் எமது காரை எப்படி பாதுகாப்பது என்ற விடையம் கேள்வியாக எழுகிறது. 90 சதவிகிதமான நபர்கள், தமது கார் சாவியை வீட்டு வாசலுக்கு அருகாமையில் வைப்பதே வழக்கம். இதனால் தான் திருடர்களால், இலகுவாக அதன் சிக்னலை கண்டு பிடிக்க முடிகிறது. சற்று தொலைவில் வைத்தால் கூட அதன் சிக்னலை கண்டுபிடிப்பது கடினம். எனவே நீங்கள் விலை கூடிய கார்களை வைத்திருந்தால். அதன் சாவியை உங்கள் வீட்டினுள். அதாவது வாசலில் இருந்து மிக தொலைவான இடத்தில் வைத்தால் நீங்கள் தப்பிக் கொள்வீர்கள். இது போன்ற கார் திருட்டு நடத்தால். உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனி காருக்கான காசை தருவார்கள். ஆனால் உங்கள் நோ-கிளேம் -போனஸ் திவாலாக சான்ஸ் இருக்கு.

அதிர்வுக்காக,

கண்ணன்

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.