Header Ads

16 வயதுச் சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த17 வயதுச் சிறுவன்..

புதுவை கொக்கு பார்க் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் புதுவை கடற்கரைக்கு செல்லும் போது, அங்கு கடற்கரைக்கு வந்த முதலியார் பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி இவர்கள் கடற்கரையில் சந்தித்து வந்தனர்.

அப்போது ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று 2 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

அது முதல் அந்த சிறுமி சோகத்துடன் இருந்து வந்ததால் அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது நடந்த விவரத்தை சிறுமி பெற்றோரிடம் கூறினாள்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை அரியாங்குப்பம் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

மேலும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.