Header Ads

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரம்..

மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டம் தேவல் கிராமத்தில் 8 ம் வகுப்பு படிக்கும் சிறுமி வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது 2 இளைஞர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து சிறுமி மீது ஊற்றி தீவைத்து எரித்து விட்டு ஓடி விட்டனர்.

சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு பண்டல்கண்ட் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  சிறுமிக்கு 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குற்றவாளிகள் இருவரை அடையாளம் கண்டு உள்ளனர். அதே கிராமத்தைச் சேர்ந்த  ராகவேந்திரா சென், ஷுப்ஹம் யாதவ் ஆவார்கள். இதில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்து உள்ளனர் மற்றொருவரை தேடி வருகின்றனர்.

12 வயதிற்கு குறைவான வயதுள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா மத்தியப் பிரதேச சட்டப் சபையில் கடந்த திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .

இந்த மசோத நிறைவேற்றப்பட்ட ஒரு வாரத்தில் மத்திய பிரதேசத்தின் இது போன்ற சம்பவம் நடப்பது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் டெபுலூர் தெஹில் மாவட்டத்தின் சந்தர் என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஒருவர் அவரது உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

15 வயது சிறுமி 2 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.