மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 14 பேர் பலி!!!
இந்தியா - மும்பையில் கமலா மில்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியானதோடு பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் லோயர் பேரல் பகுதியில் பிரபல கமலா மில்ஸ் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பத்திரிகை மற்றும் ஊடக அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஏராளமான கடைகள் அமைந்துள்ளன.
இந்த வளாகத்தில் உள்ள உணவு விடுதியில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதும் தீ வேகமாக பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின் கட்டிடத்தின் முழுப் பகுதிக்கும் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள் ஆவர். காயமடைந்த பலர் அருகில் இருந்த தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்