சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனம் மீது, பேருந்து மோதி விபத்து..! 11 பேர் பலி, 20 பேர் படுகாயம்..
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்றுக் காலை சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனம் மீது பஸ் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர். காலையில் நிலவிய பனி மூட்டமே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சமீப காலமாக பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனி மற்றும் காற்று மாசு நிறைந்து காணப்படுகிறது. அதனால் பல இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேலும், விமானங்கள் மற்றும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்