Header Ads

டிராக்டர் மீது லாரி மோதி கோர விபத்து - பண்டிகைக்குச் சென்ற 10 பேர் பலி..

உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்ஸாபுர் மாவட்டத்தில் உள்ள கர்வா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அருகில் உள்ள கோவில் பண்டிகைக்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். திடீரென எதிரே வந்த லாரி டிராக்டர் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் டிராக்டரில் இருந்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கர்வா கிராமத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.