ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு, விஜய்யின் மெர்சல்தான் காரணமா..? வைரலாகும் #MersalEffect#..
தற்போது 178 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பதற்கு காரணம் 'மெர்சல்' படம் தான் என ரசிகர்கள் #MersalEffect என்ற டேக்கின் மூலம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தீபாவளியன்று அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் திரைப்படம் இந்திய அளவில் ட்ரெண்டாகி நல்ல வசூல் சாதனை புரிந்தது. இதற்கிடையில் அப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்றவை குறித்த கருத்துக்கள் இடம்பெற்றிருந்ததால் படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த சர்ச்சைகளிலிருந்து மீண்டு இப்பொழுது தான் படக்குழுவினர் பெருமூச்சு விட்டனர். ஆனால் அதற்குள் பெரிய வெடி வைப்பது போல விஜய் ரசிகர் ஒரு காரியம் செய்து கொண்டிருக்கின்றன.
அசாம் தலைநகரான கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் 178 பொருட்களுக்கு வரிக்குறைப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த வரிக்குறைப்பிற்கு காரணம் நடிகர் விஜய் தான் என அவரது ரசிகர்கள் #MersalEffect என்னும் டேக்கின் மூலம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது எங்கே போய் முடியுமோ என்று தெரியவில்லை என படக்குழுவினர் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்