பசிபிக் தீவு நாடான டோங்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
பசிபிக் தீவு நாடான டோங்காவில் இன்று (சனிக்கிழமை) 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''பசிபிக் தீவு நாடான டோங்காவின் கடற்கரை பகுதியில் 90 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு நிமிடம்வரை அப்பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது'' என்று கூறியுள்ளது.
எனினும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்