பிச்சை எடுத்தால் ஜெயிலுக்கு போகனும்! ஐதராபாத் கமிஷனர் புது உத்தரவு!
ஐதராபாத்தில் இன்று முதல் பிச்சை எடுக்க தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடை உத்தரவு 2 மாதங்களுக்கு நீடிக்கும். சரியாக இன்று மாலை 6 மணியிலிருந்து இந்த தடை சட்டம் ஆரம்பிக்கும்.
ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக பிச்சைக்காரர்கள் காரணமாக நிறைய பிரச்சனைகள் நடந்தம் வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தேவையற்ற போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
மேலும், சுத்தமாக உள்ள இடங்களை பிச்சைக்காரர்கள் அசுத்தமும் செய்துவிடுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், இது போன்ற பிரச்சனைகள் மீண்டும் நகரில் வராமல் தடுப்பதற்கு காவல்துறை ஒரு புதிய முடிவை எடுத்துள்ளனர்.
இனி வரும் காலங்களில் ஐதராபாத்தின் எந்தப் பகுதியிலும் பிச்சை எடுக்க கூடாது என்று போலீஸ் கமிஷனர் எம்.மஹேந்திர ரெட்டி அறிவித்துள்ளார்.
நகரில் பிச்சை எடுப்பவர்களால் பொது மக்களுக்கு நிறைய இடைஞ்சல்கள் கொடுக்கப்படுகிறது. பிச்சை தொழிலில் நிறைய குழந்தைகளும், பெண்களும் ஈடுபடுகிறார்கள். அதேபோல் இவர்களால் பல சமயங்களில் சாலை விபத்தும் ஏற்படுகிறது.
இந்த தடை 2018 ஜனவரி 1ம் தேதி வரை மட்டுமே இருக்கும். தடையை மீறி பிச்சை எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும்.
இந்த திடீர் தடையால் பிச்சை எடுப்பவர்கள் மிகவும் பாதிப்படைவார்கள், பணம் உள்ளவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள், ஆதரவு இல்லாமல் இருப்பவர்கள் சாப்பிடுவதற்காக பிச்சை எடுக்கின்றனர்.
அவர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடாக ஏதாவது நன்மை செய்தால் அவர்களின் வாழ்வும் முன்னேற்றம் அடையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு என்றும் சொல்லலாம்

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்