பேரூந்தில் பாதுகாப்பு காவலர்கள்! தாக்கப்பட்ட பெண்!
கனடா-வினிபெக்கை சேர்ந்த பெண் ஒருவர் நகர பேரூந்துகளில் பாதுகாப்பு காவலர்களின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
பேரூந்திற்குள் மற்றொரு பெண்ணை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க முயன்ற போது வேறொரு நபர் இவரது பற்களை உடைத்து தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து குறிப்பிட்ட பெண் இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.
இச்சம்பவம் சனிக்கிழமை நகர பேரூந்து ஒன்றில் நடந்துள்ளது. மனிதனொருவர் பேரூந்தில் இருந்து ஒரு பெண்ணிடம் விரும்பத்தகாத நடவடிக்கைகளை செயற்படுத்த முனைகையில் ஐஷா வாக்கர் என்ற பெண் வாதிட்டுள்ளார். இரண்டாவது மனிதனனொருவன் தலையிட்டு ஐஷாவை முகத்தில் குத்தியுள்ளார். ஓங்கி குத்திவிட்டு பேரூந்தில் இருந்து இறங்கி சென்று விட்டான். ஐசாவிற்கு கண்ணில் காயம் பட்டு கறுத்து விட்டது.பல்லும் உடைந்து விட்டது. நரம்பு வலி ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து பாதுகாப்ப காட்சிகளை பொலிசார் ஆராய்ந்து வருகின்றனர். சந்தேக நபரான மனிதனை தேடுகின்றனர். இது ஒரு தீவிரமான தாக்குதல் சம்பவமாகும்.
இச்சம்பவத்தை தொடர்ந்து ஒவ்வொரு பேரூந்திலும் பாதுகாப்பு காவலர் பிரசன்னம் அவசியம் என தெரிவிக்கப்பட்டது.
பேரூந்துகளில் கடுமையான பாதுகாப்பு அவசியமென கடந்த வசந்த கால ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருவதாக நகரின் பொது பணித்துறை திணைக்கள தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்