Header Ads

நடு மைதானத்தில் காரை நிறுத்திய இளைஞர்! பயந்துபோன இந்திய வீரர்கள்!

ராஞ்சி டிராபியில் இன்று நடைபெற்ற டெல்லி – உ.பி இடையேயான ஆட்டத்தின் போது இளைஞர் ஒருவர் தனது காரை நடு மைதானத்தில் வந்து நிறுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ராஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தற்போது இதன் நான்காவது சுற்று போட்டிகள் நடக்கிறது.


இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து, இந்திய அணியில் இடம்பெற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் இந்த தொடர் தற்போது நடைபெறுகிறது.

இதில் டெல்லி – உ.பி இடையேயான இன்றைய ஆட்டம் நிறைவடைய 20 நிமிடத்திற்கு முன்னர், திடீரென இளைஞர் ஒருவர் தனது காரை மைதானத்திற்குள் வேகமாக ஓட்டிவந்து அதனை போட்டி நடைபெற்று வந்த பிட்ச்சின் நடுவே நிறுத்தி வீரர்களை மிரள வைத்தார்.

பதறியடித்து ஓடிவந்த ஊழியர்கள் அந்த இளைஞரை பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஏர் போர்ஸ் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த கிரீஸ் சர்மா என்பதும், மைதானத காவலர்களில் அலட்சியத்தால் தான் எந்த தடையும் இன்றி உள்ளே நுழைந்துவிட்டதாகவும் கூலாக தெரிவித்துள்ளார்.

இளைஞரின் இந்த விநோத செயலால் மைதானத்தில் இருந்த சுரேஷ் ரெய்னா, காம்பீர் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் சற்றுநேரம் திகைத்து போய் விட்டனர், இதனால் போட்டியும் 20 நிமிடங்கள் தடைபெற்றது

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.