Header Ads

ஒசாமா ரகசியங்கள்: மகன் திருமணம் உள்பட, 5 லட்சம் கோப்புகளை வெளியிட்டது சி.ஐ.ஏ..!

ஒசாமா பின் லேடன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஒசாமா பின் லேடன் அமெரிக்க சிறப்புப்படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார்
அல் காய்தா ஒசாமா பின் லேடனின் நாட்குறிப்பு, அவரது மகன் ஹம்சாவின் திருமணக் காட்சிகள் மற்றும் அவரைப்பற்றிய ஆவணப்படங்கள் ஆகியவை அல் கொய்தா தலைவரின் கணினியில் இருந்ததை கண்டறிந்துள்ளதாக சிஐஏ தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நான்காவது முறையாக இத்தகைய கோப்புகளின் தொகுதி வெளியிடப்படுகிறது.
பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பின் லேடன் இறந்த பிறகு இந்தக் கணினி கைப்பற்றப்பட்டது.
சில கோப்புகள் பாதுகாப்பு காரணங்களாலோ அல்லது சிதைந்திருப்பதாலோ அல்லது ஆபாசமாக இருப்பதாலோ வெளியிடப்படவில்லை என்று சிஐஏ தெரிவித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள கோப்புகளில் உள்ள 18,000 ஆவணங்கள், 79,000 ஒலிப்பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட காணொளிகளும் "பயங்கரவாத அமைப்பின் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை" வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக சிஐஏவின் இயக்குனர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
பின் லேடனின் மகன் ஹம்சா குறித்து தெரியவந்துள்ள தகவல்கள் என்னென்ன?
பின் லேடனின் செல்லப் பிள்ளையாக கருதப்படும் ஹம்சாவின் திருமண காணொளியும் தற்போது வெளியிடப்பட்டுள்ள காணொளிகளுள் அடக்கம். ஹம்ஸா அல் கொய்தாவின் எதிர்கால தலைவராகத் கருதப்படுகிறார். காணொளியை பகுப்பாய்வு செய்ததில் அது இரானில் எடக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு முன்பு ஹம்சாவின் இளமைக்கால காணொளிகளே பொதுவெளியில் வந்துள்ளன.
பின்லேடன் அந்த காணொளியில் காணப்படவில்லை. ஆனால், திருமண வந்திருந்த விருந்தாளிகளில் ஒருவர், "முஜாஹிதீன்களின் இளவரசனான அவரது தந்தை இத்திருமணத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவரது மகிழ்ச்சி அனைத்து முஜாஹிதீன்களுக்கும் பரவும் என்று குறிப்பிட்டுள்ளார்," என ஏபி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹம்சா பின் லேடன்படத்தின் காப்புரிமைAFP
அந்த காணொளியில் மற்ற மூத்த அல் கொய்தா புள்ளிகளும் காட்சியில் காணப்படுவதாக புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளை பகுப்பாய்வு செய்யும் ஃபவுண்டேஷன் ஃபார் டிஃபன்ஸ் ஆஃப் டெமாக்ரசீஸ் என்ற அமைப்பின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 1981 ல் எகிப்திய தலைவர் அன்வர் சதாத்தை கொன்றவரின் சகோதரரான முகமது இஸ்லம்பூலியும் அதில் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அண்மை காலமாக ஹம்சா பின் லேடன் அமெரிக்காவை மிரட்டும் வகையிலான ஒலிப்பதிவுகளை அல் கொய்தா வெளியிட்டது. அதில் சௌதி அரசாங்கத்தை வீழ்த்தவும், சிரியாவில் ஜிகாதிய நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
செப்டம்பர் 11 தாக்குதல்களின் ஆண்டு விழாவில் ஹம்சாவின் சிறுவயது புகைப்படம் நியூ யார்க் உலக வர்த்தக மையத்தின் முன்பு இருப்பதை போன்ற புகைப்படமொன்று வெளியிடப்பட்டிருந்தது.
பின் லேடனின் காணொளி பதிவுகளில் என்னென்ன உள்ளது?
பின் லேடனின் காணொளி பதிவுகளில் அன்ட்ஸ், கார்ஸ், சிக்கி லிட்டில் மற்றும் தி மஸ்கடியர்ஸ் போன்ற அனிமேஷன் திரைப்படங்கள் இருந்தன.
பிரிட்டனில் வைரலான "சார்லி பிட் மை ஃபிங்கர்" என்னும் காணொளி மற்றும் பல யூடியூப் காணொளிகளும் இருந்தன. பிரபல கம்ப்யூட்டர் விளையாட்டான ஃபைனல் பேண்டஸி VII இருந்தது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.