பிரான்சில், மூன்று நாளுக்கு ஒருமுறை, ஒரு பெண் உயிரிழப்பு..
பிரான்சில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
பிரான்சில் குடும்ப சண்டைகளால் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்டு தோறும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் ஒவ்வொரு மூன்று நாளுக்கு ஒருமுறை ஒரு பெண் உயிரிழப்பதாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 123 பெண்கள் குடும்ப தகராறில் உயிரிழந்துள்ளதாகவும் 2011ஆம் ஆண்டு இது 121 என இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தங்கள் வாழ்க்கை துணையால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாவதாக சுமார் 85,424 பெண்கள் கடந்த ஆண்டு மட்டும் புகார் அளித்துள்ளனர்.
இது கடந்த 2015 ஆம் ஆண்டை விட 3 சதவிகிதம் அதிகம் என தெரிய வந்துள்ளது. மேலும் தமது ஆண் துணையால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக சுமார் 2096 வழக்குகள் பதிவாகியுள்ளன.
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் பொருட்டு பிரான்ஸ் கடந்த ஆண்டு 30 மில்லியன் யூரோ ஒதுக்கியுள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் ஸ்பெயின் அரசு 1 பில்லியன் யூரோ ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்