பெரும் வெடிப்பு சத்தம் கடலுக்கு அடியே: ஆஜன்டீனாவின் நீர்மூழ்கிக் கப்பலை காணவில்லை
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர், பசுபிக் கடலில் பெரும் வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது எனவும். இதனை தொடர்ந்து ஆஜன்டைன் நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல் காணமல் போயுள்ளது எனவும் அன் நாடு அறிவித்துள்ளது. ஆஜன்டைன் நாட்டு போர் நீர்மூழ்கிக் கப்பல், ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை தனது கட்டுப்பாடு நிலையத்தோடு தொடர்பு மேற்கொள்ளும். ஆனால் கடந்த 3 மணி நேரமாக அது தொடர்புகள் எதனையும் ஏற்படுத்தவில்லை என்ற கவலையில் அன் நாட்டு, பாதுகாப்பு துறை இருந்துள்ளது.
ஆனால் பசுபிக் கடலில் பெரும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது எனவும். அந்த அதிர்வலைகளை தமது கடல்படை கப்பலின் சென்சர்கள் உணர்ந்துள்ளதாகவும் அமெரிக்க தெரிவித்துள்ளது. ஆஜன்டைன் நாட்டு கப்பலை காணவில்லை என்ற ரகசிய தகவலை உடனே அறிந்த அமெரிக்கா வெடிப்பு சத்தம் தொடர்பாக அன் நாட்டுக்கு தகவலை துல்லியமாக வழங்கியுள்ளது. குறிப்பாக எங்கே இருந்து அந்த சத்தம் கிடைக்கப் பெற்றுள்ளது என்று , அமெரிக்கா மிக முக்கியமான தகவலை ஆஜன்டைன் நாட்டோடு பரிமாறியுள்ளதாக ராய்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
உலகில் எந்த ஒரு மூலையில் என்ன நடந்தாலும் அதனை உலகிற்கு அறிவிக்கும் முக்கிய செய்தி சேவையாக ராய்டர்ஸ் உள்ளது. அதனை சாதாரண மக்கள் பார்வையிட முடியாது. இருப்பினும் அதிர்வு இணையத்திற்கு செய்தி வழங்குனராக ராய்டர்ஸ் உள்ளது. இதனூடாக நாம் உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலு, அதனை தமிழர்களுக்கு மறு நிமிடமே அறிவிக்கிறோம். அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்