சினிமா தியேட்டரில் சிக்கியது, சசி குடும்பம்..!
சசிகுடும்பம் சினிமா தியேட்டர்களை வாங்கியது தொடர்பான முக்கிய தகவல்கள் சத்தியம் சினிமாஸ் முக்கிய புள்ளி மூலம் வருமான வரித்துறைக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, ராயப்பேட்டையில் நகரின் முதல் தரமான சினிமா தியேட்டரை, ஆந்திராவைச் சேர்ந்த சத்தியம் குழும நிறுவனம் நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில், வேளச்சேரியில் பீனிக்ஸ் மால் என்ற, 10க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர் வளாகத்தை பல நூறு கோடி ரூபாயில், சில ஆண்டுகளுக்கு முன் கட்டினர்.
முழுமையாக கட்டி முடிக்கப்படுவதற்கு முன், சசி கும்பலின் பார்வை அந்த இடத்தின் மீது விழுந்தது. சத்தியம் குழுமத்தினரை மிரட்டி, அந்த வளாகத்தை,1,000 கோடிக்கு வாங்கியதாக, அப்போது பரபரப்பாக மீடியாவில் செய்திகள் வந்தன. அதை மறுத்த சசி குடும்பத்தினர், 'நாங்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே அந்த வர்த்தக வளாகத்தை நடத்தி வருகிறோம்' எனக் கூறினர். ஆனால், சில நாட்களில், சசி குடும்பத்தினர், அந்த இடத்தை, தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். அப்போது ராயப்பேட்டையில் உள்ள தியேட்டரையும் அபகரிக்க முயன்றனர்.
தியேட்டரில் சிக்கிக்கொண்ட சசி கும்பல்
ஆந்திர முதல்வராக இருந்தவர் தலையிட்டு, முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசியதால், கடைசி நிமிடத்தில், அந்த முயற்சியை சசி கும்பல் கைவிட்டது. ஐ.டி., ரெய்டுக்கு முன், பீனிக்ஸ் மால் தொடர்பான சொத்து ஆவணங்கள், அந்த இடம் யாரிடம் இருந்து எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டது போன்ற விபரங்களை, சத்தியம் குழுமத்தில் பணி யாற்றி வரும் ஒரு முக்கிய புள்ளி, டில்லியில் உள்ள, ஐ.டி., அதிகாரிகளுக்கு அனுப்பியதின் விளைவாகவே, இந்த ரெய்டு நடந்தாகவும் கூறப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்