மருத்துவ தேர்வில், அதிக மார்க்குகள் வாங்கி அசத்திய சீன ரோபோ..!
பீஜிங்: சீனாவில் டாக்டர் ஆவதற்கான தேர்வில் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோ அதிக மார்க்குகள் வாங்கி அசத்தி உள்ளது.
இது குறித்து சீன அதிகாரிகள் கூறி இருப்பதாவது:
இது குறித்து சீன அதிகாரிகள் கூறி இருப்பதாவது:
சீனாவை சேர்நத தொழில் நுட்ப நிறுவனமான ஐபிளைடெக் மற்றும் சிங்குவா பல்கலை கழகம் இணைந்து ரோபோ ஒன்றை தயாரித்தது. இந்த ரோபோ சீனாவில் இந்தாண்டு நடைபெற்ற டாக்டர் படிப்பிற்கான தகுதி தேர்வை எழுதியது.
இதில் ரோபோ 456 மார்க்குகள் பெற்றுள்ளது. ஆனால் வெற்றி பெற தேவையான மொத்த மதிப்பெண் 360 ஆகும். இத்தகுதி தேர்வில் நாடு முழுவதிலும் 5, 30,000தேர்வு எழுதினர். தேர்வில் மாணவர்க ளை சோதனை செய்ததை போன்றே ரோபோவையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மேலும் வருங்காலங்களில் டாக்டர்களுக்கு உதவியாக இம் மாதிரியான ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்