ஒபாமாவின் மகள் மலியாவின் காதல் லீலை... ஆதரவாக ஒன்றிணைந்த ஜனாதிபதிகளின் மகள்கள்..

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மகள் மலியாவும் அவரது காதலனும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் நேற்று முன்தினம் இணையத்தில் பதிவேற்றப்பட்டிருந்தன. இது தொடர்பில் பலரும் தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
குறித்த வீடியோவில், விளையாட்டுப் போட்டியொன்றுக்கு முன்னதாக மலியா ஒபாமா, ஒரு இளைஞனை இறுக்கி அணைத்து முத்தமிடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதியின் மகள் இவ்வாறு மைதானத்தில் நடந்துகொள்வதா எனப் பலர் விமர்சித்ததையடுத்து அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியின் மகள் இவங்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் கணக்கில், “மாணவப் பருவத்தில் இருக்கும் மலியா தனது சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு. அவர் ஒரு சுதந்திரமான பெண். அவரது சுதந்திரம் பேணப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, “மலியா ஒபாமாவை ஒரு இளம் பெண்ணாக; ஒரு கல்லூரி மாணவியாக; ஒரு தனிப்பட்ட நபராகக் கருதவேண்டுமே தவிர, விளையாட்டு பொம்மையாகக் கருதக்கூடாது” என்றும் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் சட்டப்படி, அரசியல் தலைவர்களின் பிள்ளைகளின் சுதந்திரம் பாதிக்கப்படக்கூடாது. ஆனால், அந்த விதியை மீறும் வகையிலேயே இந்தக் காட்சி பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி பில் க்ளின்டனின் மகள் செல்ஸி க்ளின்ட்டனும் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே மலியா ஒபாமா சிகரட் புகைக்கும் வீடியோ ஒன்றும், அவர் வேடிக்கையாகத் தனது பின்னழகைக் காட்டும் வீடியோ ஒன்றும் பதிவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்