Header Ads

பணத்துக்காக, மகனை கடத்திய நாடகமாடிய தந்தை கைது..!

பணத்துக்காக மகனை கடத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.


சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். டிராவல்ஸ் அதிபரான இவர், நேற்று(நவ.,7) தனது 2.5 வயது மகனை பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்றார். சிறிது நேரத்தில் தனது மனைவி இலக்கியாவை மொபைலில் தொடர்பு கொண்ட ரவிக்குமார், சிலர் தன்னை அடித்து போட்டு, குழந்தையை கடத்தி சென்றதாகவும், ரூ.5.5 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறினார். 

இதனையடுத்து, இலக்கியா தனது நகைகளை தனக்க தெரிந்தவர்களிடம் விற்று பணம் ஏற்பாடு செய்து கொடுத்தார். பணத்துடன் தன்னை மட்டும் கடத்தல் காரர்கள் வரக்கூறியதாக கூறியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த இலக்கியா போலீசில் புகார் அளித்துள்ளார்.

மகனுடன் வீ ட்டுக்கு வந்த ரவிக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
அதில், தனக்கு உள்ள கடன் மற்ற செலவுகளுக்காக மனைவியிடம் கடத்தல் நாடகம் ஆடியதையும், தனது மகனை பெரவள்ளூரில் உள்ள நண்பர் வீட்டில் விட்டு விட்டு கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.