Header Ads

உணவகத்தில் தகராறு செய்த கஸ்டமர் மீது, கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய உழியர்..

மும்பை: துரித உணவகத்தில் தகராறு செய்த கஸ்டமர்கள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
மும்பை உல்லாஸ் நகரில் சாலையோரத்தில் நடத்தி வரும் துரித உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்ற ஒரு இளைஞர் உணவின் சுவை , கட்டணம் குறித்தும் பிரச்சினை எழுப்பி தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட வாய்த்தரகாறில் இளைஞரின் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து உணவக ஊழியரை மீது தாக்க முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த உணவக ஊழியர் அங்கு இரும்பு சட்டியில் வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயை இளைஞர் மீது ஊற்றினார். இதில் இளைஞர்கள் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சி அங்கிருந்த கேமிராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உணவக உரிமையாளர் மற்றும் ஊழியரை கைது செய்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.