Header Ads

தமிழர்களை புறக்கணித்து மலையாளிகளுக்கு சொம்பு தூக்கும் விஜய் டிவி…!!!

விஜய் டிவி ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துகிறது என்றாலே அது நிச்சயம் விவாதத்திற்கு பஞ்சம் இருக்காது.
காரணம் அதில் தகுதியில்லாதவர்களுக்கே பரிசை கொடுத்து விடும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. இது பல நிகழ்ச்சிகளில் நிரூபணமாகி உள்ளது.
இந்த நிலையில் தற்போது விஜய் டிவி மலையாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா பெற்ற புகழ் உலகமே அறிந்தது. அவர் இந்த அளவுக்கு புகழ் பெற காரணம் அவர் ஒரு மலையாளி.
அந்த நிகழ்ச்சியில் 19 பேர் கலந்து கொண்டனர். ஆனால் ஓவியா மட்டும் புகழ்பெற காரணம் என்ன? எல்லாம் எடிட்டிங் என்று சொல்லப்படுகிறது.
மேலும் பிக்பாஸ் வீட்டில் செல்போனை யாரும் பயன்படுத்த கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் ஓவியா மட்டும் செல்போனை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அவர் அதனை போர்வைக்குள் வைத்து பயன்படுத்தி உள்ளாராம். புளுடூத் வசதி உள்ள அந்த செல்போனில் 50 மீட்டருக்குள் சிக்னல் கிடைக்கும்.
அதன்வழியே ஓவியாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்படும். ஆரவை காதலிக்க வேண்டும் என்பதும் இந்த கட்டளைகளில் ஒன்று.
நிகழ்ச்சி முடிந்ததால்தான் தற்போது அவர் தனது காதலையும் முறித்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது. மேலும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நடுவர்களில் பெரும்பாலும் மலையாளிகளே இருப்பார்கள்.
அதோடு விஜய் டிவியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் மலையாளிகளே. இதனால்தான் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மலையாள வாசனை சற்று தூக்கலாக உள்ளதாகவும் கருத்து நிலவுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.