திடீர் திடீர் என்று கேட்கும் துப்பாக்கி சத்தம்.. மரண ஓலங்கள் : மலையைப் பார்த்து பயந்து, ஊரையே காலி செய்த மக்கள்...!
ஒரு மலையைப் பார்த்து பயந்து போய், மக்கள் ஊரை விட்டே காலி செய்த சம்பவத்தைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஆச்சர்யப் படுகிறீர்களா? உண்மை தான்! திண்டுக்கல் மலைக்குத் தான் அப்படி ஒரு திகிலான பரிணாமம் கிடைத்திருக்கிறது.
அது ஒரு இருண்ட காலம் என்று சொன்னால், அதிகப் படியான வார்த்தையாகத் தெரிய வாய்ப்பில்லை தான். மக்கள் தூரத்தில் நின்று திண்டுக்கல் மலைக் கோட்டையில் சிற்றெறும்புகளாகத் தெரியும் சிப்பாய்களையும், திடீர் திடீர் என்று கேட்கும் துப்பாக்கி குண்டு சத்தங்களும், அதன் பின்னனியில் எழும் மரண ஓலங்கள், மலை என்றும் பாராமல் விழுந்தடித்து, உருண்டோடி வரும் மக்களைப் பார்க்க பார்க்க, அந்த மரண பயம் மலையைச் சுற்றி வாழ்ந்த மக்களையும் தொற்றிக் கொண்டு, நிம்மதியாக வாழ வழி தேடி, பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த வீடு, இடத்ததை விட்டு அயலூருக்குப் பிரயாணமானார்கள்.
நித்தம் குருஷேத்திரம் போன்று போரும் சண்டையுமாக இருந்தது. யார் அந்த மலைக் கோட்டையைக் கைப்பற்றி வைத்திருக்கிறார்களோ, அவர் தான் திண்டுக்கல் பகுதிகளின் மன்னர். ஆனால், எந்த நேரம், யார் வந்து கைப்பற்றுவார்கள்?, யார் அதிரடியாக படையெடுத்து, அந்த மலைக் கோட்டையைக் கைப்பற்றுவார்கள் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த வெளிச்சம்!
அமைதியான இந்த மலையில் சங்க காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை சமணர்கள் இந்த மலையில் செல்வாக்கோடு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த செய்தியை 13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த “கோனேரின்மை கொண்டான்” என்ற அரசாணைச் சொற்றொடருடன் உள்ள கல்வெட்டில் காணப்படும் பள்ளிச் சந்தம் பற்றிய குறிப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
பள்ளிச் சந்தம் என்பது அந்நாளில் திண்டுக்கல் மலையில் வாழ்ந்த சமண முனிவர்களால் நடத்தப் பட்ட சமணர் பள்ளியைக் குறிப்பிடுகிறது. திண்டு போல் இந்த மலை பார்வைக்குத் தெரிவதால் துவக்கத்தில் திண்டிக்கல் என்றிருந்த பெயர் மாறி திண்டுக்கல் ஆனது.

மலை உச்சியில் உள்ள சிவாலயம் “திண்டீஸ்வரம்” எனப் பட்டது. சமயக் குரவரான திருநாவுக்கரசர் சுட்டுகின்ற வைப்புத் தலங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் சைவம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்திருக்கிறது.
முதலாம் குலசேகர பாண்டியன் காலத்தில் இக் கோயில் சிறந்த வழிபாட்டினைப் பெற்றிருந்திருக்கிறது. தொடாந்து வந்த பாண்டிய மன்னர்கள், அவர்களை அடுத்து வந்த விஜய நகர அச்சுத தேவராயர், நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் நல்ல விரிவாக்கத்தைப் பெற்றுள்ளது.

இந்த மலைப் பகுதியில் அமைந்துள்ள கோட்டையினை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் கட்டினார். தென் கிழக்குப் பகுதியில் இவர் காலத்தில் கட்டப் பட்ட பழைய கோட்டையும், 11 காவல் அரண்களும், ஆழமான அகழியும் காணப் படுகின்றன.
அரங்கண்ண நாயக்கர் என்ற பாளையக்காரர் இங்கிருந்து ஆட்சி செய்தார். மதுரை நாயக்க மன்னர்களில், இறுதியாக ஆட்சி செய்த மீனாட்சி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட பின்னர், சந்தா சாகிப் திண்டுக்கல்லைக் கைப்பற்றினான்.

இவன் சகோதரன் “சதக் சாகிப்”–பை ஆளுநராக நியமித்தான். இவனது மரணத்திற்குப் பின், மைசூர் மன்னர்களின் கட்டுப் பாட்டிற்குள் வந்தது. பின்னர் 1765-ல் ஹைதர் அலியின் வசம் திண்டுக்கல் இருந்தது.
இவர் பீரங்கிப்படை, கைதிகள் கூடம், ஆயுதக் கூடம், போன்றவற்றைக் கட்டியுள்ளார். 1767-ல் ஆங்கிலேயரான கர்னல் உட் திண்டுக்கல் கோட்டையைக் கைப்பற்றி எட்டு மாதங்கள் தனது கட்டுப் பாட்டில் வைத்திருந்தார்.

பின் மீண்டும் ஹைதர் அலியின் வசமே கோட்டை வந்தது. இவரது காலத்தில் தான் அடைக்கலமாக வந்த சிவகங்கை ராணி வேலு நாச்சியார் மற்றும் அவரது குழுவினரையும் இக் கோட்டையில் பாதுகாப்பாக வைத்திருந்தார் விருப்பாச்சி கோபால் நாயக்கர்.
அப்போது, ராணி வேலு நாச்சியார் வழிபட ராஜராஜேஸ்வரி அம்மன் சிலையை, மலை மேல் உள்ள கோயிலில் நிறுவினார். இங்கிருந்து படை திரட்டித் தான் வேலு நாச்சியார் மீண்டும் சிவகங்கையைக் கைப்பற்றினார். 1783-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘கர்னல் லாங்” என்பரின் கட்டுப்பாட்டில் இக் கோட்டை இருந்தது. 1784-ல் திப்புசுல்தான் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினார்.

மலையிலிருந்து வெளியே ரகசியாகச் சென்று வர குகை ஒன்றையும் அமைத்தார். இந்தக் குகை சமீபத்தில் தான் மலையில் மேற்குப் பகுதியில் உள்ள குளத்தை தூர் வாரும் போது தான் கண்டு பிடிக்கப் பட்டது.
1790-ல் கானல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் கட்டுப் பாட்டில் கோட்டை வந்தது.

அதன் பின்னர் வரிசையாக ஆங்கிலேயர்களின் கோட்டையாகவே மாறி விட்டது. இந்த சமயத்தில் அடிக்கடி ஆங்கிலேயரை எதிர்த்த பாளையக்காரர்கள் மற்றும் புரட்சியாளர்களால் அடிக்கடி எதிர்பாராத தாக்குதல்கள் நடந்தேறின. சுரியாக வரி செலுத்தாத பாளையக் காரர்களை அடக்கி அவர்களது ஆதரவாளர்களளை சிறையில் அடைத்து வைப்பார்கள்.
ஆங்கிலேயருக்கு எதிராகப் பாளையக்காரர்களைத் திரட்டி தீபகற்பக் கூட்டமைப்பை நிறுவிப் புரட்சி செய்த விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கரின் திட்டத்தால் பல கலகங்கள் நடந்தேறின. இதனால், ஆங்கிலேயர்கள் சில கைக்கூலிகளை விலைக்கு வாங்கிட, அந்த துரோகத்தின் பலனாக கோபால் நாயக்கர் மற்றும் அவரது ஆதரவாளர்களான சோமன் துரை, பெரியபட்டி நாகம நாயக்கர், தும்மச்சி நாயக்கர், சோமநாத சேர்வை ஆகியோரை 1801-ஆம் ஆண்டு மே 4- ஆம் தேதி கைது செய்து நவம்பர் 5-ஆம் தேதி தூக்கிலிட்டனர்.
இருந்தாலும் புரட்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தன. இதனால் கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தும், பீரங்கி மேடையில் இருந்தும், தூரத்தில் கோட்டையை நோக்கி வருபவர்களைச் சுடும் சத்தம் திண்டுக்கல் மலைப் பகுதியைச் சுற்றி வாழ்ந்த மக்களின் மன நிம்மதியை அழித்தது. துப்பாக்கிக்கும், பீரங்கிக்கும் எங்கே தவறுதலாக தாங்கள் பழியாகி விடுவோமோ என்று அஞ்சி திண்டுக்கல்லை விட்டு ஏராளமானோர் வெளியேறினர்.
இப்படி யுத்த களமாக இருந்த இந்த திண்டுக்கல் மலைக் கோட்டையைச் சுற்றிப் பார்க்கவே ஒரு நாளாகும். ஆயுதக் கிடங்கு, கைதிகளை அடைத்து வைக்கும் கொட்டம், கொத்தளம், பீரங்கிகள் எல்லாவற்றையும் நேரில் காணும் போது ஊமை சாட்சியங்களாக, நடந்து முடிந்த வரலாற்றைப் பின் நோக்கி காட்டுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்