Header Ads

​நித்தியானந்தா மீது வழக்குப் பதிவு செய்ய, நீதிமன்றம் உத்தரவு! காரணம் என்ன தெரியுமா.?

திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில், நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்ய, குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருவண்ணாமலை பவழக்குன்றின் மீது, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நித்யானந்தா ஆசிரமம் அமைக்க முயற்சித்தார். அப்பொழுது அது பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து அவரது சீடர்கள் ஆக்கிரமித்திருந்த இடமும் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நித்யானந்தா கேவியட் மனு தாக்கல் செய்தார். அதில், பவழக்குன்று தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனு மீது, தனது கருத்தை கேட்கவும் கோரியிருந்தார். 

அவர் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, ஆவணங்களில் முரண்பாடு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், திருவண்ணாமலையில் உள்ள இடத்துக்கு கேவியட் மனு தாக்கல் செய்வது தொடர்பாக, பெங்களூரு நோட்டரி வழக்கறிஞர் முன்பு கையெழுத்திட்டது ஏன்?, எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நித்யானந்தா தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த குற்றப்பிரிவு காவல்துறைக்கு, நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.