ஆரவுடன் இருந்த, அந்தப் பெண் யார் ..? டென்சனான ஓவியா ..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா சக போட்டியாளரான ஆரவிடம் காதல் வயப்பட்டார். அந்த காதலை ஆரவிடம் கூறியபோது அவர் மறுத்து விட்டார்.
மேலும் அந்த நேரத்தில் ஓவியாவிடம் தனக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்று கூறி இருந்தார்.
இதன்பிறகு ஓவியாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியே வந்து விட்டார்.
இந்த நிலையில் ஆரவுடன் ஒரு பெண் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை பார்த்த ஓவியா கடும் அதிர்ச்சி அடைந்து விட்டார்.
இது குறித்து ஆரவ் கூறும்போது, அந்த பெண் நான் மாலில் வேலை செய்தபோது உடன் பணியாற்றிவர். எங்களுக்குள் வேறு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறி இருந்தார்.
இதனை கேட்ட ஓவியா சற்று ஆறுதலடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பிறகு தனக்கும் ஆரவுக்கும் இடையில் காதல் இல்லை என கூறி வந்தாலும் இன்னும் அவரை நினைத்து கொண்டிருப்பது போல இருக்கிறது.
அதனால் மீண்டும் ஆரவ் மற்றும் ஓவியா இடையே காதல் மலர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்