சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் உதவி கேட்ட, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்..!
பீஜிங்: வடகொரியாவின் அணு ஆயுத சோதனை பிரச்னையை தீர்க்க உதவும்படி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 5 ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். தென்கொரியா, ஜப்பானில் ஏற்கனவே பயணத்தை முடித்து விட்ட அவர், நேற்று முன்தினம் சீனா வந்தார். அவருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரமாண்ட வரவேற்பு அளித்தார். பீஜிங்கில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க, மக்கள் மண்டபத்தில் நேற்று இருவரும் சந்தித்து பேசினர்.
அப்போது ஜின்பிங்கிடம் டிரம்ப் கூறுகையில், ‘‘வடகொரியாவின் அணு ஆயுத சோதனை பிரச்னைக்கு தீர்வு காண சீனா உதவி செய்ய வேண்டும். அமெரிக்காவும் சீனாவும் முயன்றால் அது முடியும்’’ என்றார்.
அதற்கு பதிலளித்த ஜின்பிங், ‘‘ சீன- அமெரிக்க உறவு இப்போது புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது. உலக மக்களுக்கு நன்மை தரும் விஷயங்களில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட சீனா எப்போதும் தயாராக இருக்கிறது’’ என்றார். பின்னர், இருநாடுகளுக்கும் இடையே சுமார் 16 லட்சம் கோடி மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். இதில், அமெரிக்காவிடம் இருந்து சீனா 300 போயிங் விமானங்களை வாங்கும் ஒப்பந்தமும் அடங்கும்.
* அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவுக்கு சுற்றுப் பயணம் வந்திருப்பது இதுவே முதல்முறை.
* இரு தலைவர்களும் ஏற்கனவே இரண்டு முறை நேருக்கு நேரும், 8 முறை தொலைபேசி மூலமாகவும் பேசியுள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்